மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியுடன் தனிமையில் எடுத்த வீடியோ, போட்டோஸ் லீக்; காதலை கைவிட்டதால் ஆவேசம்.!!
சென்னை பெரம்பூர் குட்டி தெருவை சேர்ந்தவர் ஜோஷுவா (வயது 20). இவர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து காதலித்து வந்துள்ளார்.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ஜோஷிவா நடவடிக்கை சரியில்லாததால் காதலி பிரிந்து சென்றுள்ளார். இதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளாத ஜோஷிவா, காதலியை தன்னிடம் பேசக்கூறி பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.
பெண் இதனை கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த ஜோஷிவா, காதலிக்கும் போது தாங்கள் தனிமையில் இருந்ததை பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருந்த நிலையில், புகைப்படம் மற்றும் விடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்கிறார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். பின் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் ஜோஷிவாவை கைது செய்தனர்.
அவனிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, இணையத்தில் பதிவிடப்பட்டு பகிரப்பட்ட வீடியோவும் நீக்கம் செய்யப்பட்டது.