பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குப்பை லாரியால் சோகம்.. கணவன் கண்முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த மனைவி.!
சென்னையில் உள்ள சோழவரம், காரனோடை பகுதியை சார்ந்தவர் பிரேம்குமார் (வயது 45). இவரது மனைவி பரிமளா (வயது 40). இந்த தம்பதியின் உறவினர், வண்ணாரப்பேட்டையில் இருந்து சபரிமலைக்கு மாலை அணிவித்து சென்றுள்ளார். இவரை வழியனுப்பி வைக்க தம்பதிகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வண்ணாரப்பேட்டைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர்.
இவர்கள் மூலக்கடையை அடுத்துள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் வருகையில், பின்னால் வந்த சென்னை மாநகராட்சி குப்பை லாரி, தம்பதியின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில், தம்பதிகள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த பரிமளாவின் மீது குப்பை லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியதில், கணவர் கண்முன்னே பரிமளா பரிதாபமாக பலியாகினர். பிரேம் குமார் லேசான காயத்துடன் உயிர்தப்பியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கீழ்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல் அதிகாரிகள், காயமடைந்த பிரேம்குமாரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குப்பை லாரியால் விபத்து ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குப்பை லாரியின் முன்பக்க லாரியை கல்லால் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.