திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாக்கு சேகரிக்க சென்ற ம.நீ.ம வேட்பாளரை விரட்டிவிரட்டி கடித்த நாய்.. சென்னையில் சம்பவம்.!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப். 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வாக்குசேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், வாக்குசேகரிக்க சென்ற வேட்பாளரை நாய் கடித்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம் மாநகராட்சி, 2 ஆவது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளவர் தினகரன். இவர், நேற்று அனகாபுத்தூர் பாலாஜி நகர் 11 ஆவது தெருவில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
வேட்பாளரான தினகரனுடன் 2 பேர் சென்றிருந்த நிலையில், அங்கிருந்த தெரு நாய் ஒன்று தினகரனை விரட்டிவிரட்டி கால்களில் கண்டித்துள்ளது. இதனால் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் தேர்தலில் வெற்றி பெற்றால் தெரு நாய்களை ஒழிப்பேன் என்று கூறி அப்பகுதியில் வாக்குசேகரிப்பில் மீண்டும் தினகரன் ஈடுபட்டார்.