மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைகுப்புற கவிழ்ந்த டேங்கர் லாரி.. சாலையில் ஆறுபோல் ஓடிய 24,000 லிட்டர் பாமாயில்.!
சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்தில் உள்ள ஆயில் மில் ஒன்றுக்கு பாமாயில் ஏற்றிச்சென்ற லாரி ஜெமினி மேம்பால தடுப்பு சுவரில் மோதியதில், லாரி தலைகுப்புற கவிழ்ந்து லாரியில் இருந்த ஆயில் சாலையில் ஆறுபோல் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் 3.15 மணி அளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து சைதைபேட்டை வழியாக டேங்கர் லாரி ஓன்று சுமார் 24 ஆயிரம் லிட்டர் பாமாயில் ஏற்றிக்கொண்டு மேடவாக்கத்தில் உள்ள காளீஸ்வரி என்ற ஆயில் நிறுவனத்திற்கு சென்றுள்ளது. முருகன் என்பவர் லாரியை ஒட்டியுள்ளார்.
இந்நிலையில் லாரி ஜெமினி மேம்பாலத்தில் வந்தபோது சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதனால் லாரியில் இருந்த 24 ஆயிரம் லிட்டர் பாமாயில் சாலையில் ஆறுபோல் ஓடியுள்ளது. விபத்து குறித்து அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லாரி ஓட்டுனரை உயிருடன் மீட்டனர்.
மேலும், கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி சாலையில் ஆறுபோல் ஓடிய ஆயிலையும் அப்புறப்படுத்தினர். லாரி ஓட்டுநர் தூங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.