நகரை பசுமையாகிய தூண்கள் கருகி வாடும் சோகம்.. அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் விரக்தி.!



chennai under ridge plants

சென்னை மாநகரினை பசுமையாக்கிட மாநகராட்சியின் சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பாலங்கள் அனைத்தும் அழகாக்க செடிகள் வளர்க்கப்பட்டன. செங்குத்து பூங்கா என்ற பெயரில் புரசைவாக்கம் மேம்பாலம். எழும்பூர் மேம்பாலம், கோடம்பாக்கம் மேம்பாலம், பெரம்பூர் மேம்பாலம், தி.நகர், நந்தனம், அடையார் உட்பட 50-ற்கும் மேற்பட்ட இடங்களில் செங்குத்து பூங்கா உள்ளன. 

இதில், பூங்காவிற்கு என மாநகராட்சி பலகோடி நிதி ஒதுக்கி, செங்குத்து பூங்காவை பராமரித்து வந்தது. கண்களுக்கு பச்சை பசேலென விருந்தளித்த பூங்கா, தனியார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் பராமரிப்பு இன்மை காரணமாக தற்போது கருகிய நிலையில் உள்ளன. மாநகரத்தின் மேம்பால தூண்களில் இதே நிலை நீடித்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை கையில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.