மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துரோகியாக ஸ்கூல் நட்பு.. இரயில்வே ஊழியர் மகனுக்கு போலி பணியானை கொடுத்து அல்வா.. சென்னை இளைஞர் லக்னோ சிறையில் அடைப்பு.!
பள்ளி தோழன் என நம்பி இரயில்வே வேலையை முறைகேடாக பெற முயற்சித்த சென்னை இளைஞர் லக்னோ சிறையில் உடல் மெலிந்து கம்பி எண்ணும் சோகத்திற்கு தள்ளப்பட்டுள்ள துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் சிராத்தனன் (வயது 67). இவர் ஓய்வுபெற்ற இரயில்வே ஊழியர் ஆவார். சிராத்தனின் மனைவி தில்லைவாணி (வயது 56). தம்பதிகளின் ஒரே மகன் சூரிய பிரதாபன் (வயது 36). பி.இ., எம்.பி.ஏ., எம்.இ., எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ.பிலாசபி போன்று பல பட்டபடிப்புகளை படித்துள்ளார்.
கடந்த ஆண்டு சூரிய பிரதாபனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இவர் இரயில்வே பணியில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் இருந்து வந்துள்ளார். தனது விருப்பத்தினை பள்ளி தோழரான மணிமாறன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். மணிமாறன் ஐ.சி.எப் இரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். நண்பனின் விருப்பத்தை தனக்கு சாதகமாக்கிய மணிமாறன், இரயில்வேயில் லக்னோ மாநில கோண்டா மாவட்டத்தில் டிக்கெட் பரிசோதகர் பணி உள்ளது.
இந்த வேலைக்கு மத்திய அமைச்சர் சிபாரிசு வேண்டும். அந்த சிபாரிசில் நானும் வேலைக்கு சேர்ந்தேன். இதற்கு ரூ.12 இலட்சம் செலவாகும். உன்னால் முடியுமா வேலை பெற்று தருகிறேன் என்று ஆசையாக பேசியுள்ளார். இதில் உள்ள நயவஞ்சக எண்ணத்தை அறிந்துகொள்ளாத சூரிய பிரதாபன் வேலைக்கு ஆசைப்பட்டு தாயிடம் விஷயத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதனை கணவரிடம் கூறினால் மகனின் வேலைக்கு அவர் தடையாக இருக்கலாம் என்று எண்ணிய தில்லைவாணி, மகனுக்கு தனது நகைகளை அடமானம் வைத்து ரூ.12 இலட்சம் பணத்தை மணிமாறனிடம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மணிமாறன் கடந்த ஏப்ரலில் கூட்டாளி நாகேந்திரன் என்பவருடன் சேர்ந்து லக்னோவில் இருந்து பலியான பணி ஆணை மற்றும் அடையாள அட்டை உட்பட சில ஆவணங்களை அனுப்பி இருக்கிறான்.
டி.டி.ஆர் பணி நியமன ஆணையை பெற்றுவந்த சூரிய பிரதாபன் லக்னோவுக்கு சென்று, அங்கிருந்த இரயிலில் ஏறி டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதனை கவனித்த மற்றொரு டி.டி.ஆர் விசாரணை செய்தபோது சூரிய பிரதாபன் வந்திருந்தது போலியான அடையாள அட்டை மற்றும் பணி நியமன ஆணை என்பதை உறுதி செய்துள்ளார். இதன்பின்னரே பள்ளி நண்பன் முதுகில் குத்திய விஷயம் தெரியவந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பான புகாரின் பேரில் லக்னோ காவல் துறையினர் சூரிய பிரதாபனை கைது செய்து சிறையில் அடைக்க, அவரை மீட்க வேண்டும் என தாய் தில்லைவாணி கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார். மேலும், மொழி பிரச்சனை காரணமாக வழக்கறிஞரை நாட இயலாமல் குடும்பத்தோடு தவித்துள்ளனர். ஜாமினும் கிடைக்கவில்லை. இந்த விஷயம் தொடர்பாக ஐ.சி.எப் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னர் மணிமாறனை கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 28-ல் சூரிய பிரதாபனுக்கு பிறந்தநாள் ஆகும். அன்று சூரிய பிரதாப்பின் தந்தை மகனை காண லக்னோ சிறைக்கு சென்றபோது, அவர் உடல் மெலிந்து காணப்பட்டு கண்ணீருடன் அழுது புலம்பியுள்ளார்.
மகனின் நிலைகண்டு மன உளைச்சலோடு ஊருக்கு வந்த சிராத்தனுக்கு மாரடைப்பு ஏற்படவே, அவர் இரயில்வே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். தனது மகனை ஜாமினில் எடுக்கவும், மணிமாறனுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும் என அந்த தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்.