அப்பாவி ஜோதிடர் மீது போலி வழக்கா?... இந்து மக்கள் கட்சி நிர்வாகி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி., தாய் பரிதாப பலி.!



Coimbatore Hindu Munnani Party Astrologer Complaint Suicide Attempt

மோசடி புகார் அளிக்கப்பட்ட ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சித்ததில், ஜோதிடரின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் புகார் அளித்த தொழிலதிபரின் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கோயம்புத்தூரை சேர்ந்த இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு தலைவர் பிரசன்ன ஸ்வாமிகள் மீது மோசடி புகார் அளித்திருந்தார். அதாவது, இடப்பிரச்சனையை தீர்த்துவைக்க கூறி பிரசன்ன ஸ்வாமிகளிடம் சிறப்பு பூஜைக்காக ரூ.25 இலட்சம் ரொக்க பணம், 15 சவரன் நகைகள் ஆகியவை கொடுத்ததாகவும், பிரசன்ன சுவாமி தன்னை ஏமாற்றியதாகவும் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யவே, பிரசன்ன ஸ்வாமிக்கு நீதிமன்றத்தில் ஜாமினும் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரசன்ன சுவாமி தனது மனைவி அஸ்வினி மற்றும் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பிரசன்ன ஸ்வாமியின் குடும்பத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர், அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரசன்ன ஸ்வாமியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

tamilnadu

இதனையடுத்து, செல்வபுரம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பிரசன்ன சுவாமி கட்டிவந்த கோவிலுக்கு கருப்பையா ரூ.1 இலட்சம் நன்கொடை மட்டும் கொடுத்த நிலையில், புகாரில் ரூ.25 இலட்சம் பணம் மற்றும் 15 சவரன் நகைகள் மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார் என்பது அம்பலமானது. பிரசன்ன ஸ்வாமியின் தரப்பில் கருப்பையாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்புகாரை ஏற்ற காவல் துறையினர் கருப்பையா மற்றும் அவரின் மனைவி உட்பட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் தவறு இழைத்தவர்கள் கைது செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.