மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#கடலூர் மக்களே உஷார்.. ஒரே நேரத்தில் குவிந்த 1000 பேர்.! தீவிரமாக பரவும் மர்ம காய்ச்சல்..!
ஒருவழியாக கோடை காலம் முடிந்து மெல்ல மெல்ல வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இப்போது அன்றாடம் மழை அல்லது லேசான தூறல் பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும், இரவு நேரத்தில் சற்று தூரல் இருப்பது மக்களை நிம்மதியாக உறங்க வைக்கிறது என்று கூறினால் மிகையாகாது.
பருவ நிலையில் மாற்றம் ஏற்பட துவங்கி இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் அன்றாடம் தொடர் மழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக தற்போது பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட துவங்கியுள்ளன.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பலருக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகின்றது. ஆகவே இன்று காலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக குவிந்த காரணத்தால் மருத்துவமனை ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் தவித்து போயினர்.
கடலூர் மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் பலருக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்த மர்ம காய்ச்சலுக்கு பலியானதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இது போன்ற காய்ச்சலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.