முகநூல் மூலம் பழகி திருமணம்... பல லட்சம் ரூபாய் நகை மற்றும் பணத்தை ஏமாற்றிய பெண்...!!



Dating through Facebook and getting married... A woman cheated of several lakhs of rupees of jewelery and money...!!

ஃபேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்து 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 37 சவரன் நகைகளை பெற்று மோசடி செய்ததாக பெண் மீது கீழக்கரை வனச்சரகர் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்ந வனச்சரகர் முத்துராமு (29). இவருக்கும், சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி காமராஜர் நகரில் வசித்து வந்த நசீனா சபீபா பர்வீன் (32), என்ற பெண்ணுக்கும், 2020-ல் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் உண்டானது. 2020 நவம்பர் மாதம் 7-ஆம் தேதி சேலம் கோட்டை பள்ளிவாசலில், திருமணம் செய்துள்ளார். 

முத்துராமு திருமண செலவிற்காக, 2 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கார் வாங்கிக் கொடுத்துள்ளார். திருமண பரிசாக, 37 சவரன் நகை வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி நசீனாவிற்கு புதிதாக தொழில் துவங்க நசீனாவிக்கு,10 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.கடந்த, 2021 பிப்ரவரி மாதம் 15 தேதி நசீனாவின் வீட்டிற்கு சென்ற முத்துராமு தன் மொபைல் போன் வேலை செய்யாததால் மனைவியின் மொபைல் போனை பயன்படுத்தி இருக்கிறார். 

அப்பொழுது அந்த செல்போனுக்கு பல  ஆண்களிடம் இருந்து தொடர்ச்சியாக போன் வந்துள்ளது. இது குறித்து முத்துராமு கேட்டதற்கு, அது என் தனிப்பட்ட விஷயம் என்று சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே 50 க்கும் மேற்பட்ட ஆண்களை நசீனா ஏமாற்றியது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து தான் செலவழித்த 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 37 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திரும்ப கேட்டு,மோசடி செய்த நசீனா சபீபா பர்வின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முத்துராமு ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவின்படி, நசீனா சபீபா பர்வின் மீது கீழக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.