மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 கார்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதி கோர விபத்து.. தொப்பூர் கணவாயில் நடந்த பயங்கரம்.. 10 பேருக்கு சோகம்.!
தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி அடுத்தடுத்த 5 கார்களின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதி உள்ளது. அதிக வளைவுகள் மற்றும் ஏற்றங்களை கொண்ட கணவாய் பகுதியாக இவை அமைந்துள்ளதால், இப்பகுதியில் அவ்வப்போது கோர விபத்துகள் நிகழ்வதுண்டு. இந்த நிலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் 6 கார் மீது லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஓசூரில் இருந்து சேலம் நோக்கி பயணம் செய்த 6 கார், ஒரு லாரி காலை 08:30 மணியளவில் தொப்பூர் கணவாயில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்தடுத்து 6 கார்களில் லாரி மோதியுள்ளது.
இதில், லாரிக்கு அருகே இருந்த காரில் பயணம் செய்தவர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். 5 வாகனமும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல் துறையினர், காயமடைந்தோரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான லாரி ஓட்டுனருக்கு வலைவீசப்பட்டுள்ளது.