#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு.!
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரதத்தறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 2ஆவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுது.