மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விரைவில் மாற்றியமைப்பட உள்ள மின்கட்டணம்... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அதன்படி 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் உயரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு திட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என நுகர்வோர் எழுதிக்கொடுக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 301முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 147.50 வரை கூடுதலாக செலுத்தும் வகையில் மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.