மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிர்வாணமாக போட்டோ அனுப்பச்சொல்லி தொந்தரவு.. மாணவியின் செல்போன் நம்பரை பெற்று குழுவாக சேர்ந்து மிரட்டல்.!
கல்லூரி மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சமூக வலைதள பக்கத்தை உபயோகம் செய்து வருகிறார். இவரின் புகைப்படத்தை சேகரித்த மர்ம நபர், அவரின் அலைபேசி நம்பரை எப்படியோ பெற்றுள்ளார். இதனையடுத்து, மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த கும்பல், அதனை மாணவி மற்றும் அவரின் தாய், உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
முதலில் பணம் வேண்டும் என்று கூறிய கும்பல், பின்னர் தொடர்பு கொண்டு நான் பணம் தருகிறேன் உனது ஆடையில்லா படங்களை அனுப்பி விடு என்று கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன மாணவி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.
மேலும், அக்கும்பலை சேர்ந்தவன் தொடர்பு கொண்டு பேசுகையில், "உன்னைப்போல பல பெண்களை நாங்கள் மிரட்டியுள்ளோம். நீ போட்டோ அனுப்பவில்லை என்றால் உனது நண்பர்களுக்கு நாங்கள் ஆபாசமாக சித்தரித்த படங்களை அனுப்புவோம். நாங்கள் ஒரு குழுவில் இயங்கி வருகிறோம். நீ எங்களின் ஒரு நம்பரை பிளாக் செய்தால் பல நம்பரில் இருந்து போன் செய்வோம்" என்று மிரட்டியுள்ளது.