மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஈரோடு கிழக்கு: வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு!.. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை..!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்தது. வாக்குச்சாவடிகளில் குவிந்த மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வந்த மாவட்ட ஆட்சியர், ஆய்வு மேற்கொண்டு அறையின் பாதுகாப்பை உறுதி செய்தார். இந்த பின்னர் அறையை பூட்டிய அதிகாரிகள், அறைக்கு சீல் வைத்தனர். நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளதை அடுத்து அங்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.