"குடிகாரர்களுக்காக குரல் கொடுக்க எனக்கு வாக்களியுங்கள்" - ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் களமிறங்கும் மதுகுடிப்போர் சங்கம்.!



Erode East by Poll Tamilnadu Mathu

 

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பதை விழிப்புணர்வாக ஏற்படுத்தி மதுபானம் குடிக்க கூடாது என அறிவுறுத்தினாலும், அதனால் ஏற்படும் கொலை, கொள்ளை, எதிர்கால சீர்கேடு போன்ற நிகழ்வுகளை எடுத்துரையிட்டாலும் பொங்கல், தீபாவளி என டாஸ்மாக் வசூல் ஆண்டுக்கு ஆண்டு உச்சம்தான் பெறுகிறது. 

Erode East

நிழற்படம்: தொடர்புடையது (அரசு டாஸ்மாக் கடை)

இந்த நிலையில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறுகையில், "தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் மதுபானத்திற்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுகிறது.

Erode East

நிழற்படம்: தொடர்புடையது (அரசு டாஸ்மாக் கடை)

இந்த விஷயம் குறித்து இன்று வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் எந்த சட்டமன்ற உறுப்பினரும் குரல் கொடுக்கவில்லை. இதனால் நான் தேர்தலில் களமிறங்கி இருக்கிறேன். நான் மக்கள் வாக்களித்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் மதுபிரியர்களின் நலனுக்கு சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன். அதற்காகவே தேர்தலில் களமிறங்கியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.