மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
50 யூனிட் மின்சாரத்திற்கு ரூ.95 ஆயிரம் EB பில் : ஈரோட்டில் பேரதிர்ச்சி சம்பவம்.. அதிர்ந்துபோன கூலித்தொழிலாளி.!
மாதத்திற்கு 50 யூனிட் மின்சாரம் பயன்படுத்தாத வீட்டிற்கு ரூ.95 ஆயிரம் மின்சார கட்டணம் என குறுஞ்செய்தி சென்றதால் கூலித்தொழிலாளி பதறிப்போனார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ரேவண்ணா (வயது 40). இவர் கூலித்தொழிலாளி ஆவார். தனது வீட்டிற்கு 40 யூனிட் முதல் 50 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தி வந்துள்ளார்.
அரசின் திட்டப்படி வீட்டிற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதால், ரேவண்ணா தனது வீட்டிற்கு மினக்கட்டணமே செலுத்தவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு ரூ.94,985 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன ரேவண்ணா, தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ரேவண்ணாவின் புகாரை ஏற்ற அதிகாரிகள், மின்கட்டண குளறுபடியை சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரேவண்ணா நிம்மதிப்பெருமூச்சு விட்டார்.