திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Breaking: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தாயார் உயிரிழப்பு... தொண்டர்கள் இரங்கல்!!
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நல குறைவால் காலமானார். இதற்கு தொண்டர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
95 வயதாகும் பழனியம்மாள் நாச்சியார் நேற்று முன்தினம் இரவு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து உடனே அவரை பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தனது தாயை ஓ. பன்னீர் செல்வம் நேற்று வந்து பார்த்துவிட்டு அவரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து ஓ. பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து புறப்பட்டு அவசரமாக தேனி பெரியகுளம் வருகிறார்.