திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. என்னவொரு நாட்டுப்பற்று.! முன்னாள் ராணுவ வீரர் செய்த அசத்தலான காரியம்! குவியும் பாராட்டுகள்.!
இந்தியாவில் 75வது சுதந்திர தினம் மிகவும் கோலாகலமாக, விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் தியாகங்களை போற்றி பெருமைபடுத்தும் வகையில் அனைவரும் தங்களது வீடுகளில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகள் விடுத்துள்ளார்.
மேலும் இந்தியாவில் இயங்கிவரும் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் வசித்து வரும் முன்னாள் இராணுவ வீரரான அய்யலுசாமி என்பவர் தனது வீட்டின் சுற்றுச்சுவர் முழுவதும் மூவண்ண தேசிய கொடியை வரைந்து நாட்டின் மீதான தனது பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அய்யலுசாமி அவர்கள் 1970 முதல் 1986 வரை இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் 1971ல் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போரின் போதும் ராணுவத்தில் இருந்து போரில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியப் பற்றை வெளிப்படுத்தி ராணுவ வீரர் அய்யலுசாமி செய்துள்ள இந்த அசத்தலான காரியம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.