35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்; 20 கார்கள் உடைப்பு - பதற்றத்தில் மக்கள்!!
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி என்றாலே போலீசாருக்கு கூடுதல் வேலையாகிவிடும். இந்த விழாவின் இறுதிக்கட்டமே விநாயகர் ஊர்வலம் தான். அந்தந்த பகுதியில் இருக்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் விநாயகர் ஊர்வலம் ஆடல் பாடலுடன் விமரிசையாக இருக்கும். இதில் ஓரு பகுதியினருக்கு மற்றொரு பகுதியினருக்கு போட்டி நிறைந்ததாகவே இருக்கும்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் விநாயகர் ஊர்வலம் எந்த தெரு வழியாக செல்கிறது என்பது தான். சிலர் இந்த ஊரல்வளம் தங்கள் தெரு வழியாக வருவதை விரும்புவதில்லை.
இப்படி ஒரு சம்பவம் தான் நேற்று இரவு செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடைபெற்றது. நேற்று இரவில் செங்கோட்டை மேலூர் பகுதியில் வீர விநாயகர் சிலை உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஓம்காளி திடலுக்கு மொத்தம் 38 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அந்த சிலைகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசிக்கும் பகுதி வழியாக செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலூர், பெரிய பள்ளிவாசல் தெரு வழியாக பெண்கள் உள்ளிட்ட விழாக்குழுவினர் சுமார் ஆயிரம் பேர், நேற்று இரவு 9.30 மணி அளவில் விஸ்வநாதபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இந்த தெருவை சேர்ந்த சுமார் 500 பேர் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதையடுத்து விநாயகர் சிலை அந்த தெருவுக்கு வந்தபோது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் விநாயகர் சிலை மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடைகள், ஏ.டி.எம். மைய முன் பகுதி அடித்து நொறுக்கப்பட்டது. இந்த மோதலில் 3 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கோட்டை போலீசார் இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். அதன்படி அவர்கள் கலைந்து சென்றனர். இருந்தபோதும், அங்கு பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.