மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக வரலாற்றில் முதன் முறையாக உயர்நீதிமன்றத்தில் டபேதாராக பதவியேற்ற பெண்..!
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் டபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு உதவியாளர்களாக டபேதார்கள் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சிகப்பு தலைப்பாகை, கையில் செங்கோலுடன் வெள்ளை உடை அணிந்து இவர்கள் நீதிமன்றங்களில் பணியாற்றுவது வழக்கம்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் டபேதாரராக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியதிற்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதியரசர் மஞ்சுளாவுக்கு உதவியாளராக திலானி என்ற பெண் டபேதாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றதில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற திலானி இந்த பணிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.