காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
"எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை!" தஞ்சையில் மக்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து முடக்கம்
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் இன்றுவரை கஜா புயலால் பாதித்த மக்களை அரசு கண்டுகொள்ளவில்லை என மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் அற்புதபுரம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊருக்கு எவ்வித நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை என தஞ்சாவூர்- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த திருக்கானுர்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திவ்யா அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனாலும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் கூறுகையில், எங்கள் கிராமத்தை மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோர் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.