மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஜா புயல் முன்னெச்சரிக்கை! மாலை 6 மணி முதல் பேருந்து, மின்சார சேவை நிறுத்தப்படும்.!
கஜா புயலின் காரணமாக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று கடலூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் போக்குவரத்து துறைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் தென்மாவட்டங்களை அச்சுறுத்தி வரும் கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.
இன்று மாலை ஏழு மணிக்கு மேல் நாகை அருகே புயல் கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சூறை காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களான நாகை, கடலூா், திருவாரூா், ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் படிப்படியாக மின்சார தேவையும் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் 405 அவசர ஊா்திகள், மாநிலம் முழுவதும் 936 அவசர ஊா்திகள், 42 இருசக்கர அவசர கால ஊா்திகள் தயாா் நிலையில் உள்ளது.