மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமியாரை கிண்டல் செய்த நபரை அறிவாளால் வெட்டிய மருமகன்!
சென்னை பெரம்பூர் திருவிக நகர் 21 வது தெரு மீன் மார்க்கெட் அருகே நடைபாதையில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி மோகன். இவர் நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென மோகனை தாங்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில், அவர்களிடமிருந்து தப்ப மோகன் திரு வி க நகர் காவல் நிலையத்திற்கு ஓடினார். அங்கு ரத்தம் வடிந்த நிலையில் அவர் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து மோகனை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே திரு வி கா நகர் போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை மோகன் போதையில் மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் தங்கம் என்ற பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.
இதில், கிண்டல் செய்த பெண்ணின் மருமகன் தான் ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து போதையில் மோகன் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.