மக்களே உஷார்.. 16 மாவட்டங்களுக்கு அலர்ட்... இன்றும், நாளையும் வெளுக்கப்போகும் கனமழை..! எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்..!



heavy-rain-alert-in-2-days-tamilnadu

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tamilnadu

மேலும் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நாளை திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் அதிகபட்சமாக வெப்பநிலை 30-40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் இருக்ககூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.