96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருநங்கையுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு... மனைவி கண்டித்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு - விமலா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்பது மாதங்களே ஆன நிலையில் ராமுக்கு அதே பகுதியை சேர்ந்த சரத் என்ற சரளா என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து ராமுவும், சரளாவும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த செய்தி விமலாவுக்கு தெரிய வரவே அவர் ராமுவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமு மற்றும் சரளா பாலாற்று பகுதியில் இருந்த மரத்தில் துாக்கிட்டு, நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதனை அவ்வழியாக பாலாற்றில் மீன் பிடிக்க சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.