ஈரோடு: ஓடும் இரயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 30 வயது ஒப்பந்த பணியாளர் அதிர்ச்சி செயல்.!



in erode Railway contract Employee Arrested pocso Act

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை - தமிழ்நாட்டில் உள்ள கோவை மாநகரை இணைக்கும் வகையில், மும்பை - கோவை குர்லா எக்ஸ்பிரஸ் இரயில் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இன்று காலை குர்லா எக்ஸ்பிரஸ் இரயில், ஈரோடு பகுதியில் வந்தது. அப்போது, அதிகாலை சுமார் 4 மணியளவில், குளிர்சாதன பெட்டி வகுப்பில் பயணம் செய்த 8 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: மனைவி கண்முன் ரௌடி துள்ளத்துடிக்க படுகொலை; ஈரோட்டில் பயங்கரம்.!

இரயிலில் படுக்கை விரிப்புகளை மாற்றும் ஒப்பந்த பணியாளராக நவீதம் சிங் (30) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

erode

பாலியல் தொல்லை

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்ட நிலையில், இரயில் மெதுவாக பயணம் செய்ததை பயன்படுத்தி, நவீதம் சிங் இரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

இந்த விஷயம் குறித்து இரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நவீதம் சிங்கை கைது செய்தனர். 

ஏற்கனவே இரயிலில் பயணம் செய்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பான புகார் எழுந்து பல துயரங்கள் நடந்துவிட்டன. அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றனர். 

இதையும் படிங்க: ஈரோடு: மனைவி மீது சந்தேகம்; 1 வயது பச்சிளம் குழந்தை அடித்துக்கொலை.. இப்படியும் கொடூர தகப்பன்?