14 வயது மாணவர் அடித்துக்கொலை.. நீயா? நானா போட்டியில் நடந்த பயங்கரம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி.!



in Namakkal Rasipuram 14 Year Old Student Killed 

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், எல்.ஐ.சி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரின் மகன் கவின்ராஜ். 14 வயதுடைய கவின்ராஜ், அங்குள்ள சிவானந்தா பள்ளியில் பயின்று வருகிறார். 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கவின்ராஜுக்கும், பள்ளியில் ஒரே வகுப்பில் பயின்று வரும் மாணவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. பின் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்த நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய் அன்று, மற்றொரு மாணவர் வரவில்லை. 

இதையும் படிங்க: ஆங்கில பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகளை கொல்லிமலைக்கு அழைத்த ஆசிரியர்; போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.! 

இதனிடையே, நேற்று மீண்டும் பள்ளிக்கு கவின், சண்டையிட்ட மாணவர் வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு உண்டாகி, கழிவறையில் வைத்து சண்டை நடந்துள்ளது. 

namakkal

மாணவர் கொலை

சண்டையில் கவின்ராஜை மற்றொரு மாணவர் நெஞ்சு, கழுத்து பகுதியில் கடுமையாக தாக்க, அவர் அங்கேயே மயங்கிப்போயினர். மாணவர் திடீரென மயங்கியதாக சகமானவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆசிரியர்கள் மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

மேல் சிகிச்சைக்காக நாமக்கல் சென்ற மாணவர் உயிரிழப்பு உறுதி செய்யப்படவே, அங்கு பிரேத பரிசோதனையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனால் விசாரணையில் கவின்ராஜ் - சக மாணவர் இடையே நடந்த சண்டை தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, 14 வயது சிறுவனை கொலை செய்ததாக மாணவர் ஒருவரிடம் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாமக்கல்: குடிக்க பணம் கொடு.. மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல்.. இளைஞர் அதிர்ச்சி செயல்.!