சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
கள்ளகாதலியின் நடந்தையில் சந்தேகம்; ஆத்திரத்தில் நடந்த கொடூர சம்பவம்..!

வேறொரு நபருடன் பேசி வந்த கள்ளகாதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட நபர், பெண்ணை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், காசிவயல் பகுதியில் வசித்து வருபவர் ஜெனிபர் கிளாடிஸ் (வயது 32). திருமணம் முடிந்த ஜெனிபருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக ஜெனிபர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். தற்போது பெட்ரோல் நிலையத்தில் கணக்காளராக வேலைபார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: ஊட்டி: டூவீலர்-லாரி நேருக்கு நேர் மோதி சோகம்; 18 வயது கல்லூரி மாணவர் பலி..!
ஜெனிபரின் கொலை
இதனிடையே, முகமது அலி என்பவருக்கு சொந்தமான வீட்டில், ஜெனிபர் அரிவாள் வெட்டுக்காயத்துடன் சடலமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் வந்து ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஜெனிபரின் கொலை குறித்து விசாரித்தபோது பல பரபரப்பு தகவல் கிடைத்தது.
கள்ளக்காதல் விவகாரம்
அதாவது, முகமது அலிக்கு திருமணமாகி கேரளாவில் மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். மனைவியை விவாகரத்து செய்து வாழ்ந்து வரும் முகமது - ஜெனிபர் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் கணவன் - மனைவியை போல வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது ஜெனிபர் காய்கறி கடை வியாபாரி ஒருவரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
சந்தேகம்
இதனால் கள்ளக்காதலி ஜெனிபரின் நடத்தை மீது முகம்மதுவுக்கு சந்தேகம் ஏற்படவே, ஆத்திரமடைந்த அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் கொலை நடந்துள்ளது. விசாரணையில் உண்மையை கண்டறிந்த அதிகாரிகள், முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுத்தை தாக்கி பெண் பரிதாப பலி; நீலகிரியில் சோகம்.!