தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
12 வருடங்களாக வயிற்றில் கத்தரிக்கோலுடன் வாழ்ந்த பெண்; மருத்துவர்களின் அஜாக்கிரதை காரணமா...?..!
திருத்தணி பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கத்திரிகோல் வைத்து தைத்த விவகாரத்தில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பி கே ஆர் புரம் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஒரு காவலாளி இவரது மனைவி குபேந்திரி.
கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு குபேந்திரிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் குபேந்திரியை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோல் அகற்றப்பட்டது. இதற்கிடையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து வேலூர் மருத்துவ இணை இயக்குனர் கண்ணகி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளித்த மருத்துவர், உதவி மருத்துவர், செவிலியர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரனை அறிக்கை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.