ரயிலில் தூக்கி வீசப்பட்ட ஐடி ஊழியர்.. பரிதவித்துப் போன பெற்றோர்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.!



it-profession-lady-who-has-thrown-from-the-train

வேலைக்கு சென்ற பெண் :

சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரில் ஏழாவது தெருவில் ஐஸ்வர்யா என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் தரமணியில் அமைந்துள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஐஸ்வர்யா வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார்.

ரயிலில் அடிபட்டு சோகம் :

அப்போது திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் தண்டவாளத்தை அவர் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது மின்சார ரயில் ஒன்றில் ஐஸ்வர்யாவுக்கு அடிபட்டு அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா துடி துடித்து உயிரிழந்துள்ளார். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்தனர்.

இதையும் படிங்க: "என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டியா.." மாணவர்கள் முன் ஆசிரியை கொலை.!! வாலிபர் வெறி செயல்.!!

train accidents in india

கதறி அழுத பெற்றோர் :

ஐஸ்வர்யாவின் பிரேதத்தை மீட்ட அவர்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இளம் வயது பெண்ணான ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் இந்த தகவலை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். நீ இல்லாமல் நாங்கள் எப்படி இருப்போம் என்று ஐஸ்வர்யாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுத்துள்ளனர் இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: #அரியலூர் : போலிஸாரை எதிர்த்து, ராணுவவீரர் போராட்டம்.. கலெக்டர் ஆஃபீஸ் முன் தர்ணா.!