மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டத்தில் காலியாக உள்ள 510 மல்டி டாஸ்கிங் பணிகளை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு https://tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 18 வயது முதல் 25 வயதுடையவர்களும், அரசு வேளையில் இருப்பவர்களுக்கு ஐந்து வருடம் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி/எஸ்.டி போன்ற பட்டியல் ஜாதி பிரிவினருக்கு ஐந்து வருடம் வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு போன்றவைகள் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 11 நவம்பர் 2019
விண்ணப்பம் முடியும் நாள் : 29 நவம்பர் 2019
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
தேர்வு நடைபெறும் நாள் : 22 டிசம்பர் 2019