இது ஏற்புடையது அல்ல.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.! நன்றி கூறிய நடிகை குஷ்பு!! நடந்தது என்ன??



kanimozhi-abologies-to-kushbu

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகி சைதை சாதிக் என்பவர் பேசியுள்ளார். அப்பொழுது அவர் பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகளான குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில், ஆண்கள் பெண்களை இவ்வாறு தவறாக பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்துவந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள்  பெண்ணின் கருப்பையை இழிவு செய்கின்றனர். இவர்களை போன்ற ஆண்கள் தங்களை 'கலைஞரை பின்பற்றுபவர்கள்' என்று கூறிகொள்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படும் புதிய திராவிட மாடல் இதுதானா? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அதனை மு.க.ஸ்டாலின்,  கனிமொழி ஆகியோருக்கும் டேக் செய்துள்ளார்.

தொடர்ந்து இதற்கு பதிலளித்து கனிமொழி, ஒரு பெண்ணாக, மனிதராகவும் அவ்வாறு பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், அவர்கள் பேசிய இடம் அல்லது சார்ந்த கட்சி என எக்காரணத்தைக் கொண்டும் இதனை சகித்துக்கொள்ள முடியாது. இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடியும். ஏனெனில் எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளார்.

இதற்கு குஷ்பு நன்றி தெரிவித்து, உங்களது நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.  பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக நீங்கள் எப்போதும் துணை நிற்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்