பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி அதிரடி முடிவு! கலக்கத்தில் தொண்டர்கள்
கலைஞர் கருணாநிதியின் மகளும் திமுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாள் ஜனவரி 5. இவருக்கு பிறந்தநாள் கொண்டாடும் எண்ணமில்லை என்று பகீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ள கனிமொழி தன் தந்தையைப் போலவே இதழியல், இலக்கியத் துறைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கருணாநிதிக்கும் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்திக்கும் 1968ஆம் ஜனவரி 5ஆம் தேதி பிறந்தவர் கனிமொழி.
இன்னும் 2 நாட்களில் இவரது பிறந்தநாள் வருவதால் கட்சி தொண்டர்கள் இவருக்கு வாழ்த்து சுவரொட்டிகளை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கனிமொழி தனது பிறந்தநாளை கொண்டாடும் எண்ணமில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக அறிகிறேன். கழகத் தோழர்கள் இதனை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை கொண்டாடும் எண்ணம் இல்லை. நண்பர்கள் இதை புரிந்துக் கொண்டு நேரில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த முடிவு தொண்டர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இருப்பினும் கலைஞர் இறந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இவரது இந்த முடிவை பலர் வரவேற்றுள்ளனர்.
எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக அறிகிறேன். கழகத் தோழர்கள் இதனை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை கொண்டாடும் எண்ணம் இல்லை. நண்பர்கள் இதை புரிந்துக் கொண்டு நேரில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 3, 2019