திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலை ஏற்க மறுத்த காதலனை பழிவாங்க, சகோதரியை விபச்சாரியாக சித்தரித்த இளம்பெண்.. பகீர் சம்பவம்.!
தோழியாக பழகிய பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளைஞனை பழிவாங்க, காதலனின் சகோதரியை விபச்சார அழகியாக சித்தரித்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வரும் இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், கடந்த சில நாட்களாகவே அவரிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். விபச்சாரத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி தனது மொபைல் நம்பரை யாரேனும் தவறாக உபயோகம் செய்திருக்கலாம் என்று எண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், இளம்பெண்ணின் பெயரில் புதிய போலியான கணக்கு தொடங்கப்பட்டு, அவரது போட்டோக்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு பதிவேற்றப்பட்டது அம்பலமானது. அதில் அவரின் செல்போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.
அவரின் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கில் பெண்ணை விபச்சார அழகியாக சித்தரித்து கூறியிருப்பதால் பலரும் அவருக்கு தொடர்பு கொண்டதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, இளம்பெண்ணின் போட்டோவை உபயோகம் செய்து இவ்வாறான செயலில் ஈடுபட்டது யார்? என்ற விசாரணையில் மாதொரு இளம்பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், இளம்பெண்ணின் சகோதரரை கைதான இளம்பெண் காதலித்து வந்த நிலையில், தோழியாக உன்னை பார்க்கிறேன் என பெண்ணுக்கு அவர் ஆலோசனை கூறிவிட்டு விலகி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி தனது ஒருதலைக்காதலனை பழிவாங்க, அவரின் சகோதரி போட்டோவை அவதூறாக சித்தரித்து இன்ஸ்டா & முகநூல் பக்கங்களில் பதிவேற்றியது அம்பலமானது. பெண்ணை கைது செய்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.