மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிளகாய்பொடித்தூவி கணவனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மனைவி.. இராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, பண்ணந்தூர் இந்திரா காலனி பகுதியில் வசித்து வருபவர் நரேஷ் குமார் (வயது 42). இவர் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சசிகலா. தம்பதிகள் இருவருக்கும் 2 மகன்கள், ஒரு மகள் பிள்ளைகளாக உள்ளனர்.
இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில வருடமாகவே தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நரேஷ் குமாரும் இராணுவத்திற்கு பணியாற்ற சென்றுள்ளார். பின்னர், நேற்று விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
ஊருக்கு வந்தவர் அரசு மதுபான கடையில் குடித்துவிட்டு, மதுபோதையில் மனைவியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சசிகலா வீட்டில் இருந்த மிளகாய்பொடியை நரேஷ் குமாரின் முகத்தில் தூவி, கட்டையால் தாக்கியுள்ளார். மேலும், கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த நரேஷை மீட்டுள்ளனர்.
சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சசிகலாவை தேடி வருகின்றனர்.