மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இடையூறாக இருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்... அடுத்து நடந்த தரமான சம்பவம்.!
மது அருந்துவதற்கு சிசிடிவி கேமரா தடையாக இருந்ததால், அதனை அடித்து உடைத்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியில் காவல்துறையினர் 48 சிசிடிவி கேமராக்களை பொருத்தி குற்ற செயல்கள் நடக்காமல் கண்காணித்து வந்ததால் குற்றங்கள் குறைந்திருந்தன.
இந்த நிலையில், மது அருந்துவதற்கு தடையாக இருந்ததாக கூறி 3 இளைஞர்கள் சிசிடிவி கேமராக்களை போதையில் அடித்து உடைத்துள்ளனர்.இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அருகாமையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 3 பேரையும் கைது செய்து உள்ளனர்.
மேலும் அவர்களிடம், எதற்காக சிசிடிவி கேமராக்களை உடைத்தீர்கள்? என பல கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.