மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்... தாய் அடித்து கொலை.!! மகன் கைது.!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்ட தகராறில் மகன், தாயை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மகனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாட ஊருக்கு வந்த மகன்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள ஏரித்திடல் பகுதியைச் சேர்ந்தவர் நாகூரான்(68). இவரது மனைவி மணியம்மாள்(65). இந்த தம்பதியினரின் மகனான சுரேஷ் என்பவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 31ம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார் சுரேஷ்.
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்
இந்நிலையில் தீபாவளி முடிந்த மறுநாளான நவம்பர் ஒன்றாம் தேதி மது அருந்தி வந்திருக்கிறார் சுரேஷ். மேலும் அதிகமாக மது குடிக்க வேண்டும் என பணம் கேட்டு தனது தந்தையை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரது தாய், மகனை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது தாயை தாக்கி இருக்கிறார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மணியம்மாலை அருகில் இருந்தோர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: "புள்ளத்தாச்சிய இப்படி செஞ்சிட்டானே.." தாய், மகள் கொடூர கொலை.!! தந்தை வெறி செயல்.!!
கைது செய்த காவல்துறை
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் தாயை தாக்கி கொலை செய்த சுரேஷை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Big News: ஆம்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அத்துமீறிய காமக்கொடூரன்; அடித்துக்கொன்ற தகப்பன்..!