Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
புள்ளிங்கோ என்றால் என்ன? பலருக்கும் எழும் சந்தேகம்!
புள்ளிங்கோ என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விஷயம் வைரலாகி டிரெண்டாவது வழக்கமாகிவிட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் "புள்ளிங்கோ" என்ற வார்த்தை இணையத்தில் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்.. என்ற பாடல் டிக் டாக்கில் சமீபத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்டது. மேலும் புள்ளிங்கோ இருக்காங்கோ என விஜய் பாடியதிலிருந்து இந்த வார்தை தமிழகம் முழுவதும் சென்றடைந்தது.
புள்ளிங்கோ என்ற வார்த்தைக்கு சில அடையாளங்களையும் வைத்துள்ளனர். அதாவது தலையில் இரண்டு புறங்களிலும் முடியை ஒட்ட வெட்டிவிட்டு உச்சியில் மட்டும் அதிகப்படியான முடியை வைத்திருப்பது புள்ளிங்கோவுடைய பிரதான அடையாளமாக உள்ளதென கூறுகின்றனர்.
பிள்ளைகள் என்பதனை, பேச்சுவழக்கில் புள்ளைகள் என கூறி, தற்போது புள்ளிங்கோ என பயன்படுத்தினார்கள். தற்போது இணையத்தில் எதாவது நகைச்சுவை வீடியோக்களை வெளியிடும்பொழுது அந்த வீடியோவின் கடைசி வரி நம்ம புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் என்ற வரியிலே முடிக்கின்றனர். ஆனால் புள்ளிங்கோ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. பிள்ளைகள் என்ற வார்த்தையை தான் புள்ளிங்கோ என கூறுகின்றனர் என்பதை தற்போது உணர்கின்றனர்.