குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
மிக்ஜாம் புயல் எதிரொலி.. சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாப பலி.!
மிக்ஜாம் புயல் காரணமாக தலைநகர் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன.
இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அனைவரும் முகாம்களுக்கு இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினார். அதேபோல திருக்கழுக்குன்றம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 75 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.