மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIn: மிரட்டும் மிக்ஜாம் புயல்.. 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
மிக்ஜாம் புயலின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெண்பாக்கம் ஆகிய 4 தாலுகாவிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் எதிரொலியால் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற பணிகளுக்கு வெளியே வர வேண்டாம் என்றும் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.