மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.? அமைச்சர் கொடுத்த தகவல்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது.
கொரோனாவால் 2020 -2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். கொரோனா 2-வது அலை தீவிரம் காரணமாக, 12-ம் வகுப்பு பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.
மாணவர்கள் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாத காரணத்தால் பெற்றோர்கள் அவர்ளுடைய எதிர்காலம் குறித்த பயத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீா்ப்பின்படி, தனியாா் பள்ளிகள் 75 சதவீதம் தான் கட்டணம் வாங்க வேண்டும். அந்த 75 சதவிகிதத்தில் , 40 சதவீதம் ஒரு தவணையாகவும், 35 சதவீதம் மற்றொரு தவணையாக வசூல் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஓரிரு நாள்களில் தனியாா் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.