மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனிமே சுடுகாட்டுக்கு நீங்க போக வேண்டாம்!.. பிணத்தை தூக்க ஆளில்லையா கவலையே படாதீங்க!.. வந்துடுச்சி மொபைல் சுடுகாடு...!!
முதல் முறையாக தமிழகத்தில் நடமாடும் மயான சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற பகுதிகளில் உயிரிழப்பவர்களின் உடல்கள், ஈரோடு மாநகராட்சியும் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து 14 வருடங்களாக நடத்தும் மின் மயானத்தில் எரியூட்டப்படுகின்றன. இதை தொடர்ந்து கிராம மக்களும் பயன் பெரும் வகையில் நடமாடும் பிணம் எரிக்கும் வாகனத்தை அந்த அமைப்பு தயார் செய்துள்ளது.
25 லட்சம் ரூபாய் செலவில் கேரள மாநிலம் திருச்சூரில், தகன மேடை வாகனம் தயார் செய்யப்பட்டு, வாங்கப்பட்டுள்ளது. இந்த தகன மேடை வாகனம் வீடுகளுக்கே சென்று, இறந்தவர்களின் உடல்களை பெற்று அடக்கம் செய்யலாம். அதற்கான கட்டணம் 7,000 ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.
இறந்த வரின் உடல் ஒருமணி நேரத்தில் எரியூட்டப்பட்டு, அஸ்தி குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என்றும், கிராமப்புறங்களில் ஒதுக்கப்படும் இடங்களுக்குத் தகன மேடை கொண்டு செல்லப்பட்டு உடல்கள் தகனம் செய்யப்படும் என்றும், இதனால் எரியூட்டும் செலவு பாதியாகக் குறைந்து நேரமும் மிச்சமாகும் என்று தொண்டு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.