ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
கர்ப்பிணி மனைவி போதையில் கொலை; விடிந்ததும் மனைவியை கேட்டு அதிர்ச்சி..! மது அரக்கனால் கொடூரம்.!

தனிமனிதனின் தலைக்கேறிய போதை கர்ப்பிணி மனைவியின் உயிரை பறித்த பதைபதைப்பு சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரின் மனைவி லட்சுமி, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஹரிஹரன், தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சம்பவத்தன்று நடந்த சண்டையில், போதையில் இருந்த ஹரிஹரன் கல்லை எடுத்து மனைவியின் தலையில் தாக்கி இருக்கிறார். இதனால் இரத்த வெள்ளத்தில் கர்ப்பிணி மயங்கி விழுந்துள்ளார்.
ஹரிஹரனோ போதையில் உறங்கிவிட, உயிருக்கு துடித்த பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்மணி, 5 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளியான ஹரிஹரனை கைது செய்தனர்.
இரவு போதையில் நடந்தது எதுவும் தெரியாமல் காலை விழித்த கயவன், மனைவியை காணவில்லையே என அக்கம் பக்கத்திலும் விசாரித்து இருக்கிறான். அதன் பின்னரே போதையில் தான் செய்த கொடுமை அம்பலமாகி இருக்கிறது.