மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துரோகம்... மனைவியிடம் அத்து மீறிய நண்பன்... தீர்த்துக் கட்டிய கணவர்.!
மயிலாடுதுறை அருகே மனைவியிடம் அத்துமிரு என்ற நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்போவும் தொடர்பாக கொலை செய்த நபரை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேல செங்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் இவர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரும் கம்பி கட்டும் ஃபிட்டரான மணிமாறன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் கம்பி கட்டும் பணிக்காக மணிமாறன் தனது மனைவியுடன் சீர்காழி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் மணிமாறனை சந்திப்பதற்காக சசிகுமார் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடந்த தினத்தன்று மணிமாறன் வீட்டில் சசிகுமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் சசிகுமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ரிப்போர்ட் வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மணிமாறனை கைது செய்து விசாரணை செய்தனர்.
காவல்துறையின் விசாரணையில் சசிகுமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் மணிமாறன். தனது வீட்டிற்கு வந்து சென்ற நண்பன் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அதனைப் பற்றி மனைவி தன்னிடம் கூறியதால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.