மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து அரசு ஒதுக்கீடு கிடைக்கவில்லை; மகன் தற்கொலை செய்த சோகத்தில் தந்தையும் தற்கொலை.. சென்னையில் சோகம்.!
சென்னையில் உள்ள குரோம்பேட்டை, குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரின் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). செல்வம் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார்.
தான் கஷ்டப்பட்டாலும் மகனை எப்படியாவது மருத்துவராக ஆக்க வேண்டும் என செல்வம் இருந்துள்ளார். சி.பி.எஸ்.இ பாடப்பிரிவில் 12ம் வகுப்பில் 424 மதிப்பெண்கள் பெற்ற ஜெகதீஸ்வரன், மருத்துவத்துறை மீதான ஆர்வத்தால் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு எழுதி அரசு இடஒதுக்கீடு பெறுவேன் என நம்பிக்கையுடன் இருந்த ஜெகதீஸ்வரன், அதற்கான பயிற்சியும் எடுத்து வந்துள்ளார்.
இவருடன் பயின்ற மாணவர்களில் சிலர் 450 மதிப்பெண் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காத காரணத்தால் பொறியியல் படிப்பு தேர்வு செய்துள்ளனர். தன்னுடன் நண்பர்கள் யாரும் தேர்வு எழுதவில்லை என ஜெகதீஸ்வரன் மனக்குழப்பத்தில் தவித்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது. நீட் தேர்வாலேயே மகன் தற்கொலை செய்துகொண்டதாக எண்ணிய தந்தை செல்வமும், மனஉளைச்சலில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.