கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மருத்துவர்களின் அலட்சியம்.. சிகிச்சையின் போது பலியான மூதாட்டி.. தீவிர விசாரணை..!
மேட்டூர் அருகே உள்ள கருப்புரெட்டியூரில் வசித்து வருபவர்கள் செம்மண்ணன் - லட்சுமி தம்பதியினர். இந்நிலையில் லட்சுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சு எரிச்சல் அதிகமாகியுள்ளது. இதனால் லட்சுமியை மேட்டூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய லட்சுமிக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் லட்சுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லட்சுமியின் உறவினர்கள் தவறான சிகிச்சைன்னால்தான் லட்சுமி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் லட்சுமியின் கணவர் செம்மண் அழித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெஞ்சு எரிச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.