#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ளக்காதல் பழக்கத்தால் பரிதாபம்: 2 குழந்தையை அனாதையாக்கிய தாய்.. வீடியோ எடுத்து மிரட்டியதால் சோகம்.!
கணவரை இழந்த பெண்மணி திருமணமான வாலிபருடன் கள்ளக்காதல் பழக்கம் வைத்திருந்த நிலையில், தனிமையி எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து பணம் பறிக்க முயற்சித்த கொடூரம் நடந்துள்ளது. இதனால் மனதுடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில், 27 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். பெண்ணின் கணவர் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் தனது 2 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இளம்பெண் கடந்த 22 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவே, காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இப்பெண்ணுக்கும் - குன்னூரை சேர்ந்த திருமணம் முடிந்த வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது உறுதியானது.
இதனால் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின்போது அதிர்ச்சி திருப்பமாக, கள்ளக்காதலன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து, பெண்ணின் கள்ளக்காதலனை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கள்ளகாதலனின் நண்பர்கள் நடத்திய பகீர் சம்பவம் தெரியவந்தது. கள்ளக்காதலன் கள்ளகாதலியுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வைக்க, அதனை வைத்து இளம்பெண்ணை மிரட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரின் செல்போன் மாயமாகியுள்ள நிலையில், அதனை யார் எடுத்து வைத்துள்ளார்கள்? என்ற விசாரணை நடந்து வருகிறது. இளம்பெண்ணின் செல்போன் கண்டறியப்பட்டதும், மேற்படி தவறு இளைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.