மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு.. கண்ணீரில் உறவினர்கள்..!
உதகை இன்பச் சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் பகுதியை சேர்ந்த 59 பேர், 2 ஓட்டுநர் என 61 பேர் கடந்த செப். 28ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
இவர்கள் இன்பச் சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று மாலை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பயணித்து இருக்கின்றனர்.
மாலை 6 மணிக்கு மேல் குன்னூரை கடந்து வரும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்க மறுத்த பேருந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்து உருண்டு விபத்திற்குள்ளானது.
நொடியில் நடந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் 9வதாக பலியாகி இருக்கிறார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டனர்.
இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்து ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் பேபி கலா (24), மூக்குத்தி (67), கௌசல்யா (29), தங்கம் (40), ஜெயா (50), நித்தி கண்ணன் (15), முருகேசன் (65), இளங்கேஷ் (64) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி விபரங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 9443763207 என்ற எண்ணில் உறவினர்கள் தொடர்பு கொள்ளவும் ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கிறார்.