மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் ஆர்.ஜெ ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இந்த ஷாப்பிங் மாலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
இன்று காலை 06:30 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தீ அணைக்கப்பட்டு, தீ விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.