பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஆடு மேய்க்க சென்று, நடுக்காட்டில் நடந்த பயங்கரம்.!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரின் மனைவி சரோஜா (வயது 80). சிவலிங்கம் கடந்த 10 வருடத்திற்கு முன்னதாகவே உயிரிழந்துவிட்ட நிலையில், சரோஜா தனது மகன் நட்ராஜனின் வீட்டில் வசித்து வருகிறார். அனைவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறவாங்குடி கிராமத்தில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு, சரோஜா கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வருகை தந்துள்ளார். உறவினரின் வீட்டில் இருந்த சரோஜா வயல்வெளிகளுக்கு ஆடு, மாடுகளை கவனிக்க வந்துள்ளார். சம்பவத்தன்று, ஆடுகளை மேய்க்க மூதாட்டி, அப்பகுதியை சேர்ந்த ஒருவரை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, தனிமையை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர், மூதாட்டி சரோஜாவை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். நடுக்காட்டு பகுதிக்குள் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை மீட்ட அப்பகுதி மக்கள், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
மூதாட்டிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.